;
Athirady Tamil News

வவுனியாவில் மூங்கில் பயிர் செய்கையை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்ட பேரணி..!! (படங்கள்)

0

வவுனியாவில் மூங்கில் பயிர் செய்வதை நிறுத்துமாறும், பிரதி விவசாயப்பணிப்பாளரின் இடமாற்றம் அநீதியானது என தெரிவித்தும், அமுதம் சேதன விவசாய உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் எஸ் நேசராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள விவசாய திணைக்களகத்தின் அலுவலகத்திற்கு முன்பாகவிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணியானது பசார் வீதி வழியாக வவுனியா பொது வைத்தியசாலை சந்தியை வந்தடைந்து அங்கிருந்து கண்டி வீதியிலுள்ள புதிய பேரூந்து நிலையத்தை வந்தடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், முறையற்ற இடமாற்றத்திற்கு முதலமைச்சர் உடந்தையா, யோகேஸ்வரனின் இடமாற்றம் மூங்கில் நடுகையின் பின்னணியா?

அல்லது திட்டமிட்ட பின்னணியா? முதலமைச்சரே நீதி வழங்கு, அனுமதிக்காதே அனுமதிக்காதே மூங்கில் செய்கையை அனுமதிக்காதே போன்ற கோசங்களை எழுப்பினர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, இலங்கை தேசிய அரச பொது ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்ட பேரணியின் இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தெருக்கூத்து ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + fifteen =

*