;
Athirady Tamil News

அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம்..!!

0

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகம் 3 கோட்டங்களைக் கொண்டது,அவை, பொத்துவில் கோட்டம்,அட்டாளைச்சேனைக் கோட்டம்,அக்கரைப்பற்றுக் கோட்டம்.முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் மர்ஹும் அஹமட் லெப்பை அவர்களின் இறப்பின் பின்னர் இதுவரை ஒரு நிரந்தர கல்விப்பணிப்பாளர் நியமிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

பதில் வலயக்கல்விப் பணிப்பாளராக அஷ்ஷெய்க் முஹைதீன் றஹுமத்துல்லாஹ் அவர்கள் பணிபுரிந்து வருகிறார்.இவரின் பணிக்காலத்தில் க.பொ.த.உயர்தரம்,க.பொ,த.சாதாரண தரம்,தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றில் உயர்சாதனைகளை அக்கரைப்பற்று வலயம் நிலைநாட்டியுள்ளது.

ஜாமியா நளீமியா கலாபீடத்தில் கல்விபயின்ற பட்டதாரியாகிய இவர்,கல்வி நிருவாக சேவை தரம் 11 ஐச்சேர்ந்தவர்,பிரதிக்கல்விப் பணிப்பாளராக நீண்ட கால அனுபவம் கொண்ட இவர் ஏனைய அதிகாரிகளுடனும்,பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,மாணவர்கள்,பெற்றோர் போன்றோருடன் சிறந்த ஆளிடைத் தொடர்பைப் பேணிவருகிறார்.பாடசாலைகளில் ஏற்படும் பிணக்குகளை இலகுவில் தீர்த்து வைக்கும் ஆண்மீக பலமும் இவரிடம் உண்டு.

எந்த ஒரு அரசியல் கட்சியின் சார்பும் இல்லாமல் சகல கட்சி அரசியல் பிரதிநிதிகளுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் செயற்பட்டு வரும் இவரை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிபாளராக நியமிக்க வேண்டுமென பிரதேச மக்கள் கிழக்கு மாகாண ஆளுநரிடமும்,அமைச்சர்களான,றிசாத் பதியுதீன்,றவூப் ஹக்கீம்,எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ்,முன்னாள் அமைச்சர் எ.எல்.எம்.அதாவுல்லாஹ் போன்றோரிடம் கோரிக்கை விடுகின்றனர்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*