;
Athirady Tamil News

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 14வது நினைவுதினம் அனுஸ்டிப்பு..!!

0

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

நாளை 31ஆம் திகதி பிற்பகல் 3மணியளவில், மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக குறித்த நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இந்த நினைவு தின நிகழ்வில், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை கலந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 2004ஆம்ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்களினால் ஊடகவியலாளர் நடேசன், சுட்டுக்கொல்லப்பட்டார்.

குறித்த படுகொலை தொடர்பில், பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்டபோதிலும், கொலையாளிகள் இனங்காட்டப்பட்டபோதிலும், இதுவரையில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில், 14வது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் ஊடவியலாளர்களின் படுகொலை தொடர்பில், உண்மையான முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனைகளை வழங்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்கவேண்டும் என்ற மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*