;
Athirady Tamil News

மட்டக்களப்பில் இலவச உடற் பரிசோதனை முகாம்..!!

0

வவுணதீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பில் இலவச உடற் பரிசோதனை முகாமொன்று நடைபெறுகின்றது.

மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால், இன்று (புதன்கிழமை) பிரதேச செயலக மண்டபத்தில் குறித்த இலவச உடற் பரிசோதனை முகாம் நடைபெற்றுவருகின்றது.

இந்த வைத்திய முகாமில் இரத்த அழுத்தம், உடற் பருமனும் எடையும், குருதிப் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் இடம்பெற்றுவருகின்றன.

குறித்த முகாமில், பிரதேச செயலக ஊழியர்கள் கிராம சேவை அலுவலர்கள், அரச திணைக்கள வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டு சேவையினைப் பெற்றுக்கொண்டனர்.

மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ். இளங்கோ, நாவற்காடு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் எஸ். துஷ்யந்தன் உள்ளிட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 20 =

*