;
Athirady Tamil News

பீகாரில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் மகன் சுட்டுக்கொலை..!!

0

பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பலேசாரா பகுதியில் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் மகாத்மா சவுத்ரி. நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்தபோழுது அங்கு துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த சில மர்ம நபர்கள் சரமாரியாக அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் மகாத்மா சவுத்ரியின் மகன், சதேந்திரா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகாத்மா சவுத்ரி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகாத்மா சவுத்ரியின் மனைவி மற்றும் மற்றொரு மகன் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த பப்லு டூபே என்பவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*