;
Athirady Tamil News

குண்டு துளைக்காத 8 வாகனங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு..!!

0

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரமுகர்கள் பயன்படுத்திய, குண்டு துளைக்காத வாகனங்களில் எட்டு வாகனங்களை, காட்சிக்கு வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள வருகின்றனவென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த குண்டுத்துளைக்காத வாகனங்கள் எட்டும், கொழும்பு-02 ஹூனுப்பிட்டிய கங்காராம விகாரையிலேயே காட்சிக்கு வைக்கப்படவுள்ளன என்றும் செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய வானங்களில் எட்டு, நீர்கொழும்பு ஆழ்கடலில், அண்மையில் மூழ்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த அதி பாதுகாப்புகளை கொண்ட வானங்களை நவீனப்படுத்தி பயன்படுத்துவதற்கு இயலாது என்பதனாலும், விற்பனைச் செய்வதற்கோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்துவற்கு முடியாது என்பதனாலும், அவற்றை ஆழ்கடலில் மூழ்கடித்து, அழிக்கப்பட்டதென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் கட்டணம் மற்றும் மீள்சுழற்சி செய்வதற்கான கட்டணம் ஆகியனவற்றை பொறுப்பேற்றுக்​கொண்டால் மட்டுமே அவற்றை மீளவும் பொறுப்பேற்றுக் கொள்வதாக, பிரமுகர் வாகனங்களை தயாரித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி செயலகம் பயன்படுத்திய வாகனங்களில் 95 வாகனங்களுக்கான செலவுகளை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் 16, ஏற்றுக்கொண்டிருந்தன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − eight =

*