;
Athirady Tamil News

வவுனியா நகரசபை ஊழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு..!! (படங்கள்)

0

வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்று காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை அடையாள பணிப்பறக்கணிப்பு ஒன்றுனை மேற்கொண்டனர்.

கடந்த வாரம் வவுனியா நகரசபை தலைவருக்கு வவுனியா சிறைச்சாலையின் பாதுகாவலரினால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கண்டனமும் அடையாள வேலை நிறுத்தமும் இன்று நகரசபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு ஆதரவாக செட்டிகுளம் பிரதேச சபையும், நெடுங்கேணி பிரதேச சபையும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையும், சிங்கள பிரதேச சபையும் தமது ஆதரவினையும் வழங்கியிருந்தனர்.

ஒரு மணிநேர பணி புறக்கணிப்பின் நகரசபை ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + eighteen =

*