வவுனியாவில் கல்வி நிறுவனத்தின் மீது திருடர்கள் கைவரிசை..!! (படங்கள்)

வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் இன்று (31.05.2018) அதிகாலை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை வழமை போன்று குறித்த கல்வி நிறுவனத்திற்கு ஊழியர்கள் சென்ற சமயத்தில் தளபாடங்கள் அங்காங்கே காணப்பட்டதுடன் கதவுகளும் திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் நிறுவனத்தின் உரிமையாளரினால் முறைப்பாடோன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தின் பெருமதி இதுவரை தெரியவரவில்லைமேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….