வாக்காளர் இடாப்பு மீளாய்வில் மக்களுக்கு வழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது..!!

யூன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து வாக்காளர் படிவங்கள் தத்தமது கிராம சேவையாளரூடாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அவர்கள் ஒவ்வொரு வீடுகளுக்குச் சென்று வாக்காளர் படிவங்களை பூரணப்படுத்தல்வேண்டும். 80ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க தேர்தலைப்பதிவு செய்யும் சட்டத்தின்படி வீடுகளுக்குச் சென்று அப்படிவங்களை நிரப்பி அவர்கள் செயற்படவேண்டும் என சட்டத்தில் தொவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறைச்சட்டத்தில் நிறையச்சிக்கல்கள் காணப்படுவதால் இதனை எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு கிராம அலுவலர்கள் சென்று சரியாக செயற்படாவிட்டால் பலர் விண்ணப்பிக்காமல் விட்டுவிடுவார்கள் இதனால் ஒருவர் தன்னுடைய வாக்கைப்பிரயோகிக்காமல் விட்டால் ஒன்று இரண்டு வாக்குகளினால் தோற்றவர்களும் இருக்கின்றார்கள்.
வாக்காளர் இடாப்பு தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்துவதில்லை வதிவிடச்சான்றிதழை உறுதிப்படுத்துவதற்கு, பிள்ளைகளைப்பாடசாலையில் அனுமதிப்பதற்;கு, அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நட்டஈடுகளுக்கு(வெள்ள அழிவுகள், இயற்கை அழிவுகள் போன்றவற்றிற்கு) அப்பகுதியில்தான் அவருடைய வீடுகள் அமைந்திருந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்கு, வீட்டுத்திடம் வழங்கும்போது, பல்கலைக்கழகத்திற்குச் செல்லும்போது வெட்டுப்புள்ளியைத்தீர்மானிக்கும்போது, அரசாங்கத்தினால் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்களுக்கும் இவ்வாறு அனைத்து தேவைகளுக்குமே வாக்காளர் இடாப்பு முக்கியமாகப்பயன்படுத்தப்படுகின்றது.
வாக்காளர் இடாப்பில் பெயர் உட்சேர்க்கப்படுவது தொடர்பாக மக்களிடமிருக்கின்ற விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. வழங்கப்பட்டுள்ள தேருநர்களைக் கணக்கெடுக்கும் படிவத்தை முறையாகப்பூரணப்படுத்தி யூலை 31ஆம் திகதிக்குள் முறையாக பூரணப்படுத்தி ஒப்படைக்கப்படல்வேண்டும்.
தேர்தல் ஆணைக்குழுவானது தன்னுடைய மூலோபாயத்திட்டமிடல் மூலமாக ஒவ்வொரு பங்காளிகளையும் சந்தித்து தன்னுடைய செயற்பாடுகள் தொடர்பாக ஒரு விளக்கமளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நாட்டில் சகல பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றது. அதனுடைய ஒரு பகுதியாக 2017, 2020ஆம் ஆண்டுக்கான மூலோபாயத்திட்டமிடலின் ஊடாக தெளிவூட்டல் கருத்தரங்கு நேற்று (30) காலை 10மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளரினால் மேற்கொள்ளப்பட்டது இதன்போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.