;
Athirady Tamil News

ஊடகத்துறை கற்கைநெறியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்: யாழ்.ஊடக அமையம்..!!

0

ஊடகத்துறையின் மீது ஆர்வம் கொண்ட ஆனால் உயர்கல்விக்கு வாய்ப்பில்லாத இளைஞர் யுவதிகளின் திறனை மேம்படுத்துவதற்கு ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென யாழ்.ஊடக அமையம், யாழ்.பல்கலைகழத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்.ஊடக அமையம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“யுத்த அவலங்களின் பின்னர் மீளக்கட்டியெழுப்பப்பட்டு வரும் வடக்கின் ஊடகத்துறை துறைசார் கற்கைகளின் ஊடாக மேம்படுத்தப்பட வேண்டும்.

யாழ். பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு நிதியுதவியுடன் இயங்கி வந்த ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையம் நிதியுதவி நிறுத்தப்பட்டதும், அந்த மையத்தின் செயற்பாடுகளும் முடிவிற்கு வந்தது எமக்கு கவலையளித்தது.

இவ்வாறு நிதியுதவி நிறுத்தப்பட்டதால் இடைநிறுத்தப்பட்ட ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமென யாழ்.பல்கலைக்கழகத்திடம் நாம் தொடர்ச்சியாக கோரிக்கையை விடுத்து வந்தோம்

அத்துடன் இளைஞர் யுவதிகளின் ஊடகத்துறை சார்ந்த கற்கும் ஆற்றலையும் திறனையும் மேம்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.

இந்நிலையில் எமது கோரிக்கையை ஏற்று, யாழ். பல்கலைக்கழகமும் முன்னர் இருந்த டிப்ளோமா கற்கைநெறியை மீளாய்வு செய்து, அதனை நடாத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதை நாம் வரவேற்றுகிறோம்.

யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை டிப்ளோமாவை மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சியை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிற்காக கைவிட்டுவிடாது. வளர்ந்துவரும் தமிழ் ஊடகத்துறைக்கு தனது நிறுவனம்சார் பங்களிப்பை தொடர்ந்து வழங்கவேண்டும்” என யாழ். ஊடக அமையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − two =

*