;
Athirady Tamil News

நல்லூரில் பௌத்த விஹாரை அமையும் நாள் தொலைவில் இல்லை! – ரவிகரன் எச்சரிக்கை..!!

0

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லையென, வடக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 123ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) கைதடியிலுள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு- கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் வாடிகள் அமைத்து சட்டவிரோதமான மீன் பிடியில் ஈடுபடுகிறார்கள். இவ்விடயம் தொடர்பில் மூன்று வருடங்களாக வலியுறுத்தி வருகிறேன் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் மத்திய மீன் பிடி அமைச்சராக அப்போதிருந்த மஹிந்த அமரவீரவிடம் நேரில் சென்று முறையிட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கவில்லையென கவலை தெரிவித்தார்.

கொக்கிளாய் பகுதிகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு நாயாறு, சாலை சுண்டிக்குளம் கடந்து தற்போது யாழ்.மாவட்டம் மருதங்கேணி வரை தொடர்ந்துள்ளதெனவும் ரவிகரன் தெரிவித்தார்.

இவ்வாறு தமது பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்களை தடுக்க முடியாத நிலையில் இருப்பதினால் மிக விரைவில் நல்லூர் ஆலயத்திற்கு அருகிலும் பௌத்த விஹாரை தோன்ற வாய்ப்பு காணப்படுகின்றதென அவர் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 1 =

*