இரண்டாம் வகுப்பு டிக்கெட்டா? வேண்டாம்: சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!!

சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது இரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் வழங்கப்படுகிறது.
கிரீன்ஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட்தான் வழங்கப்படவேண்டும் என்னும் வரைவை முன் வைத்தார்.
உடனடியாக 141 உறுப்பினர்கள் இதை எதிர்த்து வாக்களித்தனர். வெறும் 31 உறுப்பினர்கள் மட்டுமே வரைவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
வரைவை எதிர்த்தவர்கள், முதல் வகுப்பில் பயணம் செய்வது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரயிலிலேயே தங்கள் பணிகளைச் செய்வதற்கு உதவியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல் இன்னொரு மசோதாவும் தோல்வியடைந்தது. நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டம் தொடங்குவதற்கு முன்னும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பதுதான் அது. தற்போது வருடாந்திர தொடக்கத்தின்போது மட்டுமே தேசிய கீதம் பாடப்படுகிறது.
ஒவ்வொரு கூட்டத்திற்கு முன்னும் தேசிய கீதம் பாடுவது நாட்டுப்பற்றை அதிகரிக்க உதவும் என ஒரு மசோதா சுவிஸ் மக்கள் கட்சியால் முன் வைக்கப்பட்டது