;
Athirady Tamil News

உலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து: இதன் மதிப்பு எவ்வளவு?..!!

0

நெதர்லாந்தில் உள்ள உலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து ஏலத்தில் விடப்பட்டுள்ளது.இது சிங்கம் தூங்கும் போது இருக்கும் வடிவமைப்பைப் பெற்றுள்ளதால் Sleeping Lion என அழைக்கப்படுகிறது. இதன் எடை 120 கிராம், உயரம் 2.7 இன்ச். இதன் மதிப்பு சுமார் 6,32,000 டொலர்கள் ஆகும்.

சீனாவை பிறப்பிடமாக கொண்ட இந்த முத்து பல்வேறு வியாபாரிகளிடம் கைமாறியதையடுத்து, 1979 ஆம் ஆண்டு Amsterdam Pearl Society- யிடம் வந்தது. அன்றிலிருந்து இந்த நன்னீர் முத்து அங்கேயே பாதுகாப்பட்டது. இந்நிலையில், இதனை பொதுமக்களிடம் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 31-ம் தேதி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள வென்டெஹூயிஸ் ஏல இல்லத்தில் இதற்கான ஏலம் நடைபெற உள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + twenty =

*