;
Athirady Tamil News

கணவன் மீது காரை வைத்து மோதிய கொடூர மனைவி: பரிதாபமாக இறந்த 7 மாத குழந்தை..!!

0

கனடாவில் மது போதையில் இருந்த தாய், காரை வைத்து கணவர் மீது மோதியதால், அவர் கையில் இருந்த குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.

கனடாவின் Ontario பகுதியைச் சேர்ந்தவர் Sarah Marie Gomez(19). இவர் கடந்த திங்கட் கிழமை தன் கணவர் மற்றும் குழந்தையுடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது காரில் இவருக்கும், கணவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் கணவர் ஆத்திரத்தில் காரை நிறுத்துமாறு கூறி, காரை விட்டு இறங்கியுள்ளார்

இறங்கிய போது கையில் 7 மாத குழந்தையை தூக்கிக் கொண்டு இறங்கியுள்ளார். இதைக் கண்ட Sarah Marie Gomez காரை விட்டு இறங்கிய தன் கணவரை காரை வைத்து இடித்துள்ளார்.

இதில் குழந்தை மற்றும் கணவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், Sarah Marie Gomez தன்னுடைய கணவரை கொலை செய்யும் நோக்கிலே காரை வைத்து இடித்துள்ளார்.

மேலும் சம்பவ தினத்தின் போது Sarah Marie Gomez அளவுக்கு அதிகமாக மதுஅருந்திருந்ததாகவும், தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 18 =

*