;
Athirady Tamil News

விமானத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்த பயணி: அதிர்ச்சி சம்பவம்..!!

0

துருக்கியில் நின்று கொண்டிருந்த விமானத்தில் இருந்து பிரித்தானிய பயணி கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த Andrew Paul W(30) என்ற பயணி ஒருவர் தன்னுடைய விமான டிக்கெட்டை தொலைத்துவிட்ட காரணத்தினால், துருக்கியில் உள்ள Dalaman விமானநிலையத்தில் மூன்று நாட்கள் தங்கியுள்ளார்.

இதையடுத்து நேற்று உள்ளூர் நேரப்படி காலை 3 மணியளவில் பிரித்தானியா செல்லும் விமானம் ஒன்றில் செல்வதற்காக Andrew Paul W ஏறியுள்ளார்

அப்போது விமானத்தில் இருந்த விமான ஊழியருக்கும், இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எதற்காக வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறித்து சரிவர தெரியவில்லை.

தொடர்ந்து வாக்குவாதம் சென்று கொண்டிருந்ததால், இவர் விமானத்தில் வந்தால் பிரச்சனையாகிவிடும் என்று பைலட் பயணியை இறக்கிவிடும் படி கூறியுள்ளார்.

இதனால் விமான ஊழியர் அவரை இறக்கிவிட முற்பட்ட போது, எதிர்பாரதவிதமாக விமானத்தில் இருந்து கீழே இருக்கும் ஓடுதளத்தில் விழுந்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 6 =

*