;
Athirady Tamil News

இரும்பு கம்பிகளை வைத்து தாக்கிய கிராம மக்கள்: இரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிய நபர்..!!

0

கொலம்பியாவில் கர்ப்பிணி பெண் மற்றும் நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை கிராம மக்கள் இரும்பு ராடுகளை வைத்து தாக்கி கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவின் Atlantico-வில் உள்ள Soledad பகுதியில் கிராம மக்கள் சிலர் ஒரு நபரை கொடூர முறையில் தாக்கியதால் அவர் இரத்தம் வழிந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், Boca de Perro என்றழைக்கப்படும் அந்த நபர் நான்கு பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், அதில் ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் நான்கு வயது சிறுமியும் அடங்குவர் என்பதால் அவனை கிராம மக்கள் பிடித்து கண் மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

கல் மற்றும் இரும்பு ராடுகளை வைத்தும் தாக்கியதால், அந்த நபர் இரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, அவர்கள் வந்து தடுத்து நிறுத்த முயன்ற போதும் அவர்கள் அந்த நபரை தொடர்ந்து தாக்கியுள்ளனர்.

இதனால் பொலிசார் மேல் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்த நபரை தாக்கிய படியே இருந்துள்ளதால், பொலிஸ் அதிகாரிகள் அங்கு அதிகமாக வரவழைக்கப்பட்டனர்.

இதையடுத்து கிராமக்களிடமிருந்து அந்த நபரை மீட்ட பொலிசார், இரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அந்த நபர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 14 =

*