;
Athirady Tamil News

14 வயது பள்ளி மாணவனுடன் உறவு வைத்த பெண் ஆசிரியை: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!! (வீடியோ)

0

அமெரிக்காவில் 14 வயது பள்ளி மாணவனுடன் உறவு வைத்த ஆசிரியைக்கு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் Miamisburg நடுநிலைப் பள்ளியின் ஆசிரியையாக இருந்தவர் Jessica Langford(32). இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் 23 திகதி அதே பள்ளியில் படிக்கும் 14 வயது பள்ளி மாணவனை அழைத்து வகுப்பறையை அடைத்து அந்த மாணவனுடன் உறவு வைத்ததுடன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இந்த சம்பவம் மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்ததால், அவர்கள் இது குறித்து புகார் அளித்துள்ளனர்

இதையடுத்து இது தொடர்பான வழக்கு நடந்த வந்த வேளையில், நேற்று நீதிமன்றம் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததன் காரணமாக Jessica Langford-க்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் Jessica Langford நீதிமன்றத்தில் இது போன்ற தவறில் ஈடுபட்ட என்னை மன்னித்துவிடும் படி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + six =

*