பிரித்தானியாவில் தோட்ட வேலை செய்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துயரம்: எச்சரிக்கை சம்பவம்..!! (வீடியோ)

தனது தந்தையுடன் தோட்ட வேலை செய்தவர் hogweed என்னும் நச்சுச் செடி உராய்ந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஆபரேஷன்கள் செய்யப்படும் நிலைமைக்கு ஆளான பரிதாப சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது.
Hogweed என்னும் நச்சுச் செடி சாலையோரங்களிலும் புல்வெளிகளிலும், பொதுவாகக் கூறினால் ஈரமான நைட்ரஜன் செறிந்த மண்ணில் அதிகம் வளரும் ஒரு தாவரமாகும்.
தற்போது அதற்கு பிரித்தானியாவின் மிக ஆபத்தான தாவரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. Nathan Davies(32) தனது தந்தையுடன் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தார்
அரைக்கால் சட்டை அணிந்த அவர் புதர்களை வெட்டி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். இதனால் அவரது கால்களில் சில கீறல்களும் சிறு வெட்டுக்காயங்களும் ஏற்பட்டன.
முதலில் அவர் அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மறு நாள் கால் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட ஆரம்பித்தன.
பின்னர் தீக்காயம் ஏற்பட்டதுபோல் அவை மாறத்தொடங்கியதுடன் தாங்க முடியாத கால் வலி ஏற்பட்டதால் கடைசியில் அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழல் உருவானது
அவரைப் பரிசோதித்த மருத்துவர் உடனடியாக Nathanக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வற்புறுத்த ஒன்றல்ல இரண்டல்ல, மூன்று அறுவை சிகிச்சைகள் அவரது காலில் செய்ய வேண்டியதாயிற்று.
சில நேரங்களில் தனது காலையே அகற்றி விடலாம் என்றுகூட தோன்றியதாம் Nathanக்கு. காலில் ஏற்பட்ட சிறு கீறல்களில் Hogweed என்னும் நச்சுச் செடி ஏற்படுத்திய நோய்த்தொற்று Nathanஐ இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது.
இன்னும் மருத்துவமனையிலேயே இருக்கும்Nathan, தனக்கு ஏற்பட்ட மோசமான நிகழ்வு யாருக்கும் நேரிடக்கூடாது என்று கூறுவதோடு Hogweed குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியுள்ளார், அதிலும் குழந்தைகள் கவனம் என்கிறார் அவர்