;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்துக்கு விறகு கொண்டுசென்ற 17 வயதுடைய மாணவனை காணவில்லை..!!

0

கிளிநொச்சி- பூநகரி பகுதியிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு விறகு கொண்டுச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவனை காணவில்லை என, பூநகரி மற்றும் யாழ் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மாணவன், கடந்த 29 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளாரென, முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி- பூநகரி 6 ஆம் மைல்கல் பகுதியைச் சேர்ந்த, சிவகுமார் ஜெயராஜ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவர் பூநகரியிலிருந்து சைக்கிளில் விறகுக் கட்டுகளுடன் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + ten =

*