15 வயது சிறுமியை விற்பனை செய்தவர் கைது..!!

15 வயது சிறுமியை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்று விற்பனைச் செய்த, முச்சக்கரவண்டியின் சாரதியை கைது செய்துள்ளதாக, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
தபரவில பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை, சந்தேக நபர் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றதை அவதானித்த ஒருவர், பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதற் தடவையாக சந்தேக நபர் இச்சிறுமியை கொஸ்வத்த பகுதியிலுள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று, அங்கு பல்வேறு நபர்களிடம் பணம் பெற்று சிறுமியை அவர்களுக்கு விபசாரத்துக்காக விற்பனை செய்துள்ளார் எனவும், பின்னர் குறித்த சிறுமியை வீட்டுக்கு அழைத்துவந்து 4,000 ரூபாய் வழங்கியிருப்பதாகவும், பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், சிறுமியின் அயல் வீட்டில் வசிப்பவர் எனவும் தெரியவந்துள்ளது. சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.