;
Athirady Tamil News

ரஜினிகாந்த்தை பார்த்து யார் நீங்க என்று கேட்ட வாலிபர் மீது “தேசிய கொடி எரிப்பு” வழக்கு?..!! (வீடியோ)

0

தூத்துக்குடியில் ரஜினிகாந்த்திடம் “யார் நீங்க” என்று கேள்வி கேட்ட இளைஞர் மீது வழக்கு பதிய முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில், போலீசாரின் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ரஜினிகாந்த் சென்றிருந்தார்.

அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒவ்வொருவரிடமாக நலம் விசாரித்து வந்தார். இதில் தலையில் காயம்பட்டு சிகிச்சை பெற்று வந்த 22 வயதாகும் சந்தோஷ் ராஜ் என்ற கல்லூரி மாணவரும் ஒருவராகும்.

யார் நீங்க ச

ந்தோஷ் ராஜ் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் படித்தவர். அனைத்து மாணவர் கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றபோது போலீசாரின் தடியடியால் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவராகும். இவர் ரஜினிகாந்த்தை பார்த்து, யார் நீங்க என கேட்க அதற்கு நான்தான்பா ரஜினிகாந்த் என அவர் பதிலளித்தார்.

நியாயமான கேள்விகள்

100 நாட்கள் போராட்டம் நடைபெற்றபோது, சென்னை ரொம்ப தூரத்தில் இருந்திச்சோ, அப்போல்லாம் எங்களை பார்க்க வரவில்லை, இப்போது வந்துள்ளீர்கள். மற்றபடி நீங்கள்தான் ரஜினிகாந்த் என்பது எங்களுக்கு தெரியும் என்றார் அவர். உடனே ரஜினிகாந்த் முகம் கடுமையானது. நைசாக அங்கேயிருந்து அடுத்த படுக்கைக்கு கிளம்பி சென்றுவிட்டார். ஆனால் ரஜினிகாந்த் அதன்பிறகு கடும் கோபமடைந்தார். சென்னை பிரஸ் மீட்டில் யே என்று பத்திரிகையாளர்களை பார்த்து கத்தி கோபப்பட்டார். சமூக விரோதிகள் புகுந்து தூத்துக்குடி போராட்டத்தை கெடுத்ததாக குற்றம்சாட்டினார்.

ஆன்டி இந்தியனாம்

இந்த நிலையில், சந்தோஷ்ராஜ் கேள்வி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் ரஜினிகாந்த் ஆதரவாளர்களும், அவரின் அரசியல் நாயகர்களும் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், எதிர்த்து கேள்வி கேட்ட சந்தோஷ் ராஜ் மீது தேச துரோகி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ‘சோ கால்டு’ ரஜினி ஆதரவாளர்கள், சோஷியல் மீடியாவில் ஒரு போட்டோவை பரப்பி வருகிறார்கள். தேசிய கொடியை எரித்த திலீபனுக்கும் சந்தோஷ் ராஜுக்கும் தொடர்பு உள்ளதாகவும், இவர் ஒரு ‘ஆன்டி இந்தியன்’ என்றும் அவர்கள் குமுறுகிறார்கள்.

திலீபனுடன் தொடர்பு இல்லை

இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் சந்தோஷ் ராஜ் கூறியுள்ளதாவது: தேசிய கொடியை எரித்ததாக திலீபன் மீது வழக்கு உள்ளதாகவும், எனக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. நான் இதற்கு முன்பு திலீபனை பார்த்தது கூட இல்லை. அவருக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. ரஜினிகாந்த் வந்து சென்ற பிறகுதான் திலீபன் மருத்துவமனைக்கு வந்து சென்றார். எனக்கும் திலீபனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி வழக்குப் பதிவு செய்ய முயற்சி நடப்பதாக தெரிகிறது. அப்படி நடந்தால் என்னுடைய எதிர்காலம் பாதிக்கும்.

ஆதரவு தந்தவர்களுக்கு

மதிப்பு நாங்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அப்போது, எங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதவர்களிடம் மட்டுமே நான் கேள்விகளை கேட்டேன். ஆதரவு தெரிவித்தவர்களிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வந்தார். அவர் எங்களிடம் நலம் விசாரித்தார். அவரிடம் நான் உள்பட யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லையே.

மனசுக்கு கஷ்டமாக உள்ளது

நாங்கள் போராட்டம் நடத்தியபோது சரத்குமார் எங்கள் பகுதிக்கு வந்தார். அதுமட்டும் இல்லாமல் மக்கள் முன்னிலையிலேயே அங்குள்ள தண்ணீரை பிடித்து குடித்தார். அந்த அளவுக்கு எங்களது போராட்டத்தில் அவர் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார். நான் ரஜினிகாந்த் ரசிகர் என்ற முறையில் உரிமையில்தான் அந்த கேள்வியை கேட்டேன். அவர் இத்தனை நாட்களாக எங்கு இருந்தார்? இப்போது மட்டும் அவர் வர என்ன காரணம்? அவர் எங்களை சமூக விரோதிகள் என கூறுகிறார். நாங்கள் சமூக விரோதிகள் என்றால் எங்களுக்கு ஏன் பணம் தர வேண்டும்? பணம் கொடுத்து அவர் சமூக விரோதிகளை ஊக்குவிக்கிறாரா? ரசிகர் என்ற முறையில் ரஜினி கருத்து எனக்கு வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு சந்தோஷ்ராஜ் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*