;
Athirady Tamil News

நாமக்கலில் மகனை கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்த பெண்..!!

0

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொடுக்கால்புதூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் தர்‌ஷன் குமார் (வயது 6).

இன்று காலையில் குழந்தை தர்சன் குமார் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவனை வி‌ஷ பாம்பு ஒன்று திடீரென கடித்தது. இதனால் தர்‌ஷன்குமார் வலியால் சத்தம் போட்டு அம்மா… அம்மா என கதறி அழுதான்.

மகனின் அழுகுரலை கேட்டு வீட்டிற்குள் இருந்த ராணி பதறி அடித்தப்படி வெளியே ஓடி வந்து பார்த்தார். மகனை பாம்பு கடித்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு கிடந்த ஒரு கம்பை எடுத்து அந்த பாம்பை அடித்து கொன்று, அதனை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு இறுக்கமாக கட்டினார். பின்னர் மகனை தோளில் தூக்கி போட்டுக் கொண்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார்.

நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மகனை கொண்டு வந்து சேர்த்தார். கடித்த பாம்பையும் ராணி தனது கையில் வைத்திருந்ததை பார்த்து மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் பயமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

பாம்பை பார்த்து பயந்து ஓடும் இந்த காலத்தில் ஒரு பெண் துணிச்சலுடன் பாம்பை அடித்து கொன்று தனது மகனை காப்பாற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த சம்பவம் மருத்துவமனையிலும், பொதுமக்கள் மத்தியிலும் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*