;
Athirady Tamil News

தாங்க முடியாத துர்நாற்றம்: விமானத்தை பாதியிலேயே திருப்பி விட்ட விமானி ..!!

0

நெதர்லாந்தில் இருந்து ஸ்பெயினில் உள்ள பிரபல சுற்றுலாத் தீவுக்கு சென்ற விமானம் ஒன்று பயணி ஒருவரின் உடல் துர்நாற்றத்தால் பாதி வழியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Transavia விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று நெதர்லாந்தில் இருந்து ஸ்பெயின் நாட்டில் உள்ள பிரபல சுற்றுலாத் தீவான Gran Canaria-கு புறப்பட்டு சென்றுள்ளது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பயணிகள் ஒவ்வாமையால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.மட்டுமின்றி விமானத்தில் திடீரென்று பரவிய துர்நாற்றம் சில பயணிகளுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்படுத்தியது

இதனையடுத்து விமான ஊழியர்கள் நடத்திய விசாரணையில், சுற்றுலாப்பயணி ஒருவரின் உடல் துர்நாற்றமே இதற்கு காரணம் என கண்டுபிடித்தனர்.

பல வாரங்களாக அவர் குளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நபரை கழிவறைக்கு அனுப்ப ஊழியர்கள் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே விமானியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விமானத்தை உடனடியாக போர்த்துக்கள் நாட்டில் உள்ள ஃபாரோ நகரில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்து, அந்த நபரை வெளியேற்றவும் முடிவு செய்தனர்.

ஃபாரோ நகரில் விமானம் தரையிறங்கியதும், மருத்துவ உதவிக்குழுக்கள் விரைந்து வந்து வாந்தி மயக்கத்தால் அவதிப்பட்ட பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

மருத்துவ காரணங்களுக்காக Gran Canaria செல்லும் Transavia விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக குறித்த விமான சேவை நிறுவனம் உறுதி செய்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*