;
Athirady Tamil News

வவுனியா நகரசபை தலைவரை சிறைக்காவலர் அவமதித்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!!(படங்கள்)

0

வவுனியா நகரசபை தலைவரை சிறைக்காவலர் அவமதித்ததுடன் தாக்க முற்பட்டதை கண்டித்து இன்று (01) சிறைச்சாலைக்கு முன்பாக ஏ9 வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வவுனியா நகரசபை தலைவர் இ.

கௌதமன் மற்றும் செயலளார் ஆகியோர் கடமை நிமிர்த்தம் நகரசபை வாகனத்தில் நீதிமன்றத்திற்கு பின்புறமாக சட்டத்தரணிகளுக்கான வாகனத்தரிப்பிடம் அமைப்பது தொடர்பாக பார்வையிடச்சென்ற சமயம் தொலைபேசியில் உரையாடியவாறு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறைக்காவலர் நகரசபை வாகனத்திற்கு அண்மையில் சென்ற நிலையில் விபத்தினை தவிர்ப்பதற்காக நகரசபை சாரதி வாகனத்தினை நிறுத்தி விபத்தினை தவிர்த்திருந்தார்.

எனினும் சிறைக்காவலர் சாரதியுடன் முரண்பட்ட நிலையில் நகரசபை தலைவர் அதனை தடுப்பதற்காக தன்னை அறிமுகப்படுத்தியபோதிலும் சிறைக்காவலர் நகரசபை தலைவர் மற்றும் செயலாளரையும் உதாசீனப்படுத்தி தகாத வார்த்தை பிரயோகங்களால் பேசியதுடன் தாக்கவும் முற்பட்டிருந்தார்.
இதனை கண்டித்தே இன்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.

தியாகராசா, ஆர். இந்திரராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், செட்டிகுளம் பிரதேசசபையின் வவுனியா வடக்கு பிரதேசசபையின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டதுடன்; வவுனியா வர்த்தக சங்கத்தினர், நகரசபை ஊழியர்கள், இலங்கை தேசிய பொது அரச ஊழியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், வவுனியா நகரசபை உத்தியோகத்தர் நலன்புரிச்சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும் வவுனியா நகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததுடன் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரி. கே. இராசலிங்கம் நகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 9 =

*