;
Athirady Tamil News

சம்பள உயர்வு கோரி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் போராட்டம்..!! (படங்கள்)

0

வவுனியாவில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் இன்று (01) அடையாள பணி பகிஸ்கரிப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை அதிகரிக்கப்படும் சம்பளம் ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவில்லை என தெரிவித்தே வட பிராந்திய உதவிப் பொது முகாமையாளர் ரி.பாரதிதாசன் தலைமையில் இன்று மதியம் 12.00 மணிக்கு அடையாள பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதான வாயிலில் கறுப்பு கொடிகளை கட்டியும், கறுப்பு கொடிகளை கைகளில் ஏந்திய நிலையிலும் கோசம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2018 ஜனவரி எங்களுக்கு 30 வீதம் சம்பளம் அதிகரிப்பு வழங்கப்பட வேண்டிய நிலையில் 25 வீதம் சம்பள அதிகரிப்பு வழங்குவதாக தெரிவித்த நிலையிலும் அந்த சம்பன அதிகரிப்பு வழங்கப்படவில்லை, சம்பள அதிகரிப்பு செய்யப்படும் வரை போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும், எதிர்வரும் திங்கட்கிழமை முன்பாக தீர்வு கிடைக்காவிட்டால் அனைத்து ஊழியர்களும் முழு அளவில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + twenty =

*