;
Athirady Tamil News

புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான கலைவிழா..!!

0

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான கலைவிழா நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்விற்கு விருந்தினரர்களாக வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், இலங்கை டிலாசால் அருட்சகோதரர்களின் மாகாண முதல்வர் அருட்சகோ, அட்றியன் கிறிஸ்ரி குரூஸ், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஏ.விக்டர் சோசை.

மன்னார் மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.கணபாலன்,மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன்,மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சுகந்தி செபஸ்தியான்,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உற்பட அழைக்கப்பட்ட விருந்தினர்கள், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் பெற்றோர் என பல நூற்றுக்ணக்கானோர் கலந்துகொண்டனர்.

மேலும், இதன் போது பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*