;
Athirady Tamil News

5 ஆவது நாளாகவும் மனித எலும்புகளைத் தேடி அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு..!! (படங்கள் & வீடியோ)

0

மன்னாரில் 5 ஆவது நாளாகவும் இரு இடங்களில் மனித எலும்புகளைத் தேடி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

5 ஆவது நாளாகவும், இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மனித எலும்புகள் மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள மண் குவியல் போன்ற இரு இடங்களில் குறித்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகம் மற்றும், மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண் ஆகியவற்றிலேயே ஒரே நேரத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமானது.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பமான குறித்த அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையில், களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர் குறித்த அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களுடன், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மன்னார் நகரசபை, நில அளவைத்திணைக்களம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள், தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அகழ்வுப் பணிகளின்போது தொடர்ச்சியாக மனித எலும்புகள், பற்கள், தடயப்பொருட்களான பொலித்தீன் பக்கற், சோடா மூடி உள்ளிட்ட சில தடயப்பொருட்கள் அப்பகுதிகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 2 =

*