;
Athirady Tamil News

பண்டத்தரிப்பு, பிரான்பற்று இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

பண்டத்தரிப்பு, பிரான்பற்று இந்து இளைஞர் வி.கவுக்கு விளையாட்டு உபகரணங்கள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.

வலி.தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையின் பண்டத்தரிப்பு 04ஆம் வட்டார உறுப்பினர் அ.ஜோன் ஜிப்றிக்கோவின் வேண்டுகோளின் பேரில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் 2018ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து பண்டத்தரிப்பு, பிரான்பற்று இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 01.06.2018 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் விளையாட்டுக்கழகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்களை கழகத்தினரிடம் கையளித்தார். நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி.தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையின் பண்டத்தரிப்பு 04ஆம் வட்டார உறுப்பினர் அ.ஜோன் ஜிப்றிக்கோ , விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், இளைஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*