;
Athirady Tamil News

தனது திருமணத்திற்காக பேருந்தை தானே ஓட்டி சென்ற மணப்பெண்: சுவாரஸ்ய சம்பவம்..!! (வீடியோ)

0

சீனாவில் மணப்பெண்ணொருவர் தனது திருமணத்திற்காக பேருந்தை ஓட்டிச் சென்று, மணமகனை Pick-up செய்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

சீனாவில் திருமணத்திற்காக மலர்களாலும், பலூன்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு பேருந்து ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது.

அந்த பேருந்தை மணப்பெண்ணே திருமண உடையில் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும், பேருந்தை ஓட்டிச் சென்று மணமகனையும் அவர் Pick-up செய்தார்.

கார்பனை அதிக வெளியிடும் காருக்கு பதிலாக, குறைவான அளவே கார்பனை வெளியிடும் இந்த பேருந்தை குறித்த மணப்பெண் தெரிவு செய்துள்ளார். அதனாலேயே அவர் இதனை ஓட்டியதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ ஒன்றை அந்நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மணப்பெண் கூறுகையில்,

‘மக்கள் புகையற்ற பயணத்தை விரும்புகிறார்கள்.

எனவே, நான் திருமணம் செய்துகொண்டபோது, எங்கள் திருமண காருக்கு பதிலாக பேருந்தை பயன்படுத்திக் கொண்டேன். ஏனென்றால் இது ஒரு குறைந்த கார்பனை வெளியிடும் பேருந்து ஆகும்’ என தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − two =

*