;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் செல்ஃபியால் பொலிசில் சிக்கிய திருடன்: எப்படி தெரியுமா?..!!

0

சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாகாணத்தில் திருடப்பட்ட மொபைலில் செல்ஃபி எடுத்த நபரை பொலிசார் கையும் களவுமாக பிடிகூடியுள்ளனர்.

வலைஸ் மாகாணத்தில் உள்ள Zermatt பகுதியில் விடுதி ஒன்றில் ஜேர்மானிய பெண்மணி ஒருவர் கோடை காலத்தை செலவிட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று பெண்களுக்கான அறையில் தனது மொபைலை அவர் மறதியால் விட்டுவிட்டு வந்துள்ளார்.மொபைல் குறித்து நினைவு வந்தது சம்பவப்பகுதிக்கு சென்று தமது மொபைலை தேடியுள்ளார்.

ஆனால் மொபைல் அங்கு இல்லை, மட்டுமின்றி அச்சமயம் அங்கு துப்புரவு பணியில் இருந்த நபர் ஒருவரிடம் விசரித்ததில் அவரும் அந்த மொபைல் தொடர்பில் எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் சில நாட்கள் சென்ற பின்னர் புது மொபைல் ஒன்றையும் அந்த ஜேர்மானிய பெண்மணி வாங்கியுள்ளார்.அதில் அவர் தனது iCloud கணக்கை திறந்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அதில் தமது மொபைலை திருடிய அந்த துப்புரவு தொழிலாளரின் செல்ஃபி ஒன்று பதிவாகி இருந்தது.

இதனையடுத்து ஜேர்மானிய பெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம் அந்த நபர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து அவருக்கு அபராதம் விதித்தது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + seven =

*