;
Athirady Tamil News

வவுனியாவில் எட்டு மாதமான பச்சிளம் குழந்தையை கடத்தி தாயிடமிருந்து பிரித்த கொடூரமான தந்தை..!! (படங்கள்)

0

மனைவியுடனான பிணக்கின் காரணமாக பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தையை தாயிடம் இருந்து பிரித்து அதில் மகிழ்ந்திருக்கும் கொடூரமான அந்த கயவனின் செயல் மனித நேயமுள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்;தியுள்ளது.

தந்தை என்பவன் இரக்கம் நிறைந்தவனாகவும், குழந்தைகள் மீது அன்பு செலுத்தும் ஒரு மனிதனாகவே இருக்க முடியும்! இவ்வாறான பழி வாங்கும் சிந்தனையுடைய மனிதர்கள் ஒரு குழந்தைக்கு தந்தையாக இருக்க முடியாது.
சமூகத்தில் குற்றவாழிகளாக உலா வரும் இவ்வாறான அயோக்கியர்கள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தாயை பிரிந்த பச்சிளம் குழந்தை எவ்வாறெல்லாம் கதறியிருக்கும், ஏங்கி அழுதிருக்கும் தாயை தேடிக்கொண்டிருக்கும். தங்கள் உடல் சுகத்திற்காகவும், பெண்களை போகப்பொருளாகவும் நினைக்கும் இவன்போன்ற அரக்கர்கள் மனித சமூகத்தில் வாழவே தகுதி அற்றவர்கள்.

வவுனியா பொலிசார் குழந்தையின் தந்தையாகிய வாசுதரன் தான் குழந்தையை கடத்தினார் என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியும் என தெரிவித்திருக்கும் நிலையில் குழந்தையின் தாயார் ஆணித்தரமாக குழந்தையை வாசுதரன்தான் கடத்தினார் என தெரிவித்துள்ளார்.

20 வயது மூத்த, லண்டன் வாழ் தமிழ் ஏஜென்ஸியின் காதல் விளையாட்டு; “வவுனியா குழந்தை கடத்தலின்” முழுமையான பின்னணி..! (படங்களுடன்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 8 =

*