;
Athirady Tamil News

வவுனியாவில் ப.சத்தியலிங்கம் அவர்களினால் 41 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

????????????????????????????????????
வவுனியாவில் 41 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வவுனியா மக்கள் வங்கிக்கு முன்பாக அமைந்துள்ள கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று (02.06.2018) காலை 9.40 மணியளவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இறம்பைக்குளம் , பண்டாரிக்குளம் , ஈச்சங்குளம் , மரக்காரம்பளை, பூவரசங்குளம் , நெளுக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வறிய மற்றும் பெண் தலமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 41 குடும்பங்களுக்கு 7720 ரூபா பெறுமதியான 25 கோழிக்குஞ்சுகளும் உணவுப்பாத்திரங்களுமே வழங்கி வைக்கப்பட்டன

இந் நிகழ்வில் நகரசபை உறுப்பினர் தி.செந்தில்ரூபன் , வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் போ.மங்களநாதன், தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களின் இணைப்பாளர் ப.சிந்துஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 20 =

*