;
Athirady Tamil News

அனர்த்தத்திலிருந்து பாதுகாப்பதற்கான பயிற்சிப்பட்டறை..!! (படங்கள்)

0

உலக தரிசன நிறுவனம் (World Vision) , முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு நிலையம் (DMC) என்பன இணைந்து கிராம மட்டத்திலான அனர்த்த முகாமைத்துவக்குழுவினருக்கு வெளிக்களப்பயிற்சிப்பட்டறை (Out Bound Adventure training for disaster resilient communities in mullaitivu) ஒன்றினை கொழும்பு அவிசாவளைப் பகுதியில் வழங்கியிருந்தனர்.

இப்பயிற்சி முகாம் 3 நாட்கள் கொண்ட வதிவிடப்பயிற்சியாக இடம்பெற்று நேற்று நிறைவுற்றது. இப்பயிற்சியில் கிராம மட்டத்திலான அனர்த்த முகாமைத்துவ உறுப்பினர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், அனர்த்த முகாமைத்துவ உதவியாளர், பிரதேச சபை உறுப்பினர், ஊடகவியலாளர் என 30ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இப்பயிற்சியினை பெற்றுள்ளனர்.

அத்துடன் வேல்ட் விசன் நிறுவனமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து பல சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கிவருவதுடன் அனர்த்தத்தைக் குறைப்பதற்கான வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது. இதில் ஒரு அங்கமாகவே வெளிக்களப்பயிற்சிப்பட்டறைகளையும் வழங்கியுள்ளது. அத்துடன் இப்பயிற்சியை நிறைவு செய்த கிராம மட்டத்திலான அனர்த்த முகாமைத்துவ உறுப்பினர்கள் தமது கிராமத்திலுள்ள ஏனைய உறுப்பினர்களுக்கும் வழிப்புணர்வை ஏற்படுத்தவதாக உறுதியளித்தனர்.

பயிற்சியின் இறுதியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*