பொய் சொன்ன 6 வயது மகனை கத்தியால் கூறுபோட்ட கொடூர தாய்..!!

அமெரிக்காவில் தாய் ஒருவர் பொய் சொன்ன தனது 6 வயது மகனை கத்தியால் 6 முறை குத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓரிகான் மகாணத்தில் தனது 6 வயது மகனுடன் Nemoria Villagomez என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற அன்று தனது 6 வயது மகனை கத்தியால் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளார். இதில் கழுத்திலும் வெட்டியுள்ளார். வலி பொறுக்க முடியாத சிறுவன் அலறியடித்து ரத்த காயங்களுடன் பக்கத்து வீட்டுக்கு ஓடியுள்ளான்.
சிறுவனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்துவீட்டார், உடனடியாக பொலிசிற்கு புகார் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பத்தில் ஈடுபட்ட தாயிடம் விசாரணை நடத்தியதில், எனது மகன் பொய் கூறினான், இதற்காக நான் இவ்வாறு செய்தேன். இந்த தண்டனைக்கு அவன் தகுதியானவன் தான் என விளக்கம் அளித்துள்ளார்.இக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள தாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்