;
Athirady Tamil News

வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு..!! (படங்கள்)

0

வவுனியா குட்செட் வீதியில் 1 ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாயின் அரவனைப்பிலிருந்த 8 மாத ஆண்குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை கடந்த (31.05.2018) அதிகாலை 2.00 மணியளவில் வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்கள் கடத்திச் சென்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று (02.06.2018) மதியம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸார் குழந்தையினை கடத்தியவர்கள் என சந்தேகத்தில் இரண்டு பெண்களை கைது செய்துள்ளதுடன் குழந்தையும் மீட்டேடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தை தாயாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தாயாரையும் குழந்தையையும் வவுனியாவிற்கு கொண்டுவரும் நடவடிக்கையை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

20 வயது மூத்த, லண்டன் வாழ் தமிழ் ஏஜென்ஸியின் காதல் விளையாட்டு; “வவுனியா குழந்தை கடத்தலின்” முழுமையான பின்னணி..! (படங்களுடன்)

வவுனியாவில் எட்டு மாதமான பச்சிளம் குழந்தையை கடத்தி தாயிடமிருந்து பிரித்த கொடூரமான தந்தை..!! (படங்கள்)

“அதிரடி” இணைய வாசகர்கள், அன்பர்களுக்கு ஓர் அவசர அறிவித்தல்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 16 =

*