;
Athirady Tamil News

வவுனியாவில் அத்துமீறி திறக்கப்பட்ட வியாபார நிலையம் நகரசபையால் இழுத்து மூடப்பட்டது..!! (படங்கள்)

0

வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் நகரசபையால் இழுத்து மூடப்பட்டது

இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது

வவுனியா நகரசபைக்கு சொந்தமான வியாபார நிலையமானது அதை குத்தகைக்கு எடுத்த இஸ்லாமியர் ஒருவர் நகரசபையின் அனுமதி இன்றி புனரமைத்ததினால் நகரசபை செயலாளரால் குறித்த வியாபார நிலையத்தினை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிட்டதுடன் வியாபார நிலையம் மூடப்பட்டிருந்தது

எனினும் குறித்த உத்தரவினை மீறி குறித்த நபர் இன்று (02.06.2018) வியாபார நிலையத்தினை திறந்து வியாபாரம் செய்ததுடன் புனரமைப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தார் இதனை தொடர்ந்து முகநூல்களில் இது சம்பந்தமான பல விமர்சனங்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் நகரபிதா அவர்கட்கும் சிலரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது

இதனை தொடர்ந்து நகரபிதா அவர்கள் விரைந்து செயற்பட்டு இன்று (02) பிற்பகல் 2.30 மணியளவில் நகரசபை உத்தியோகத்தர்களுக்கு அறிவித்தல் கொடுத்து குறித்த வியாபார நிலையத்தினை இழுத்து மூடியுள்ளனர்

மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த வியாபார நிலையத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவுள்ளதாக நகரபிதா கெளதமன் அவர்கள் தெரிவித்துள்ளார்

நகரபிதாவின் இந்த அதிரடி செயற்பாட்டுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*