;
Athirady Tamil News

யாழ். மானிப்பாயில் வீடு புகுந்து கொள்ளை..!!

0

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு தங்க நகைகளை கொள்ளியிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவமானது மானிப்பாய் ஆனந்தா வீதியில் அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலில் 69 வயதுடைய குருநாதர் இரட்ணம் என்ற பெண் தலையில் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், தடயவியல் பொலிஸாருடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் போது 8 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னரே கொள்ளையிடப்பட்ட பொருள்கள் தொடர்பில் சரியான தகவலை வழங்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போது வடக்கில் பல பகுதிகளில் சிறு குழுவினர் மோட்டார் சைக்கிளில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 17 =

*