;
Athirady Tamil News

காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் பொறுப்பிலிருந்து மைத்திரி விலகல்..!!

0

இலங்கை ஜனாதிபதியின் பொறுப்பிலிருந்த காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் பொறுப்புக்களை, தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது.

இதுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பில் குறித்த அலுவலகம் இயங்கியது. எனினும் நிர்வாகப் பிரச்சினை காரணமாக அதன் பொறுப்பிலிருந்து அவர் விலகியுள்ளார்.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் குறித்த அலுவலகம் ஜனாதிபதியின் பொறுப்பிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 6 =

*