;
Athirady Tamil News

இளைஞர் யுவதிகளுக்கு கொள்கைகளும் சீர்திருத்ங்கள் பற்றிய கருத்தரங்கு..!! (படங்கள்)

0

இளைஞர் யுவதிகளுக்கு நல்லாட்சியில் முக்கிய கொள்கைகளும் சீர்திருத்ங்கள் பற்றிய கருத்தரங்குகளை அன்பிற்கு நட்பிற்குமான வலையமைப்பினர்; முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்;கு யுத்தற்கு பின்னரான நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கொள்கைகள் தொடர்பாக எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு வவுனியாவில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனமான அன்பிற்கும் நற்பிற்குமான வலையமைபின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்றது.

யாழ்பாணம் முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு வவுனியா ஆகிய மாவட்டங்களில் இளைஞர் யுவதிகளை கிராமப்புறங்களில் அணிதிரட்டி போருக்கு பின்பு இடைக்கால நீதி பொறிமுறைஇ ஊழல் மற்றும் லஞ்சம் ஓழிப்பு இஅரசியலமைப்பு சீர்திருத்தம் இதகவல் அறியும் உரிமை தொடர்பான அறிவுரைகளும் இவற்றில் செயல் திறன் அல்லது அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் நடைமுறைப்படுத்தப்படாமையினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண அரசிற்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பாக இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு குறித்தும் கருத்தரங்களில் ஆராயப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இன்ரநியூஸ்இ கிராம அபிவிருத்தி சங்கங்கள்இ மாதர்அபிவிருத்தி சங்கங்கள்இ பல்கலைக்கழகங்கள் இமீன்பிடிசங்கங்கள் இளைஞர்கழகங்கள் ஆகியன அன்பிற்கும் நற்பிற்கும்மான வலையமைப்பினருக்கு உதவி வருகின்றனர்

இவ் கருத்தரங்குகள் யாழ் மயிலிட்டி யாழ்நகரம் முல்லைத்தீவு கிராமஅபிவிருத்திசங்ககட்டிடம் மட்டக்களப்பு வவுணதீவு திருகோணமலை பாலையூற்று ஆகிய பிரதேசங்களில் இதுவரை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*