;
Athirady Tamil News

அமெரிக்காவில் இ.கோலி பாக்டீரியா பாதிப்புக்கு 5 பேர் உயிரிழப்பு..!!

0

அமெரிக்காவில் உணவு நச்சுக் கிருமியான இ.கோலி பாக்டீரியா பாதிப்புக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். இ கோலி எனப்படும் எஸ்செரிசியா கோலி ((Escherichia coli)) பாக்டீரியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிறுநீரக பாதிப்புகள், காய்ச்சல், குமட்டல், வாந்தி – பேதி, வயிற்று பாதிப்புகள் உள்ளிட்டவை ஏற்படும் என்று அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு இந்த பாக்டீரியாவால் 200 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இ கோலி பாக்டீரியாவுக்கு அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடைகளில் விற்கப்பட்ட கீரைகளை கெட்டுப்போனது தெரியாமல் வாங்கிப் பயன்படுத்தியதால் இந்த பாக்டீரியா பரவியதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 89 பேரில் 26 பேருக்கு சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 8 =

*