;
Athirady Tamil News

நிலநடுக்க ஆபத்தில் லண்டன் மாநகரம்: எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

0

பிரித்தானிய தலைநகர் லண்டனில் நிலநடுக்கம் தொடர்பான இரு எச்சரிக்கை கோடுகள் தென்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 5 வரையான நிலநடுக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டனில் அமைந்துள்ள இம்பீரியல் கல்லூரியின் புவியியலாளர் ஒருவர் மேற்கொண்ட ஆய்வில் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படக்கூடியது என தெரிவித்துள்ள புவியியலாளர், ஏற்படக்கூடிய நிலநடுக்கத்தின் தாக்கம் பயமுறுத்தக் கூடியது தான், இருப்பினும் இது நெடுநாள் நீடிக்கும் பிரச்னை இல்லை என தெரிவித்துள்ளார்.

நிலநடுக்க எச்சரிக்கை கோடுகளில் ஒன்று மத்திய லண்டனை பிணைத்துள்ளதாகவும், எஞ்சிய ஒரு கோடு Canary Wharf பகுதியில் அமைந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுவரை லண்டன் மாநகரம் நிலநடுக்கப்பகுதியல்ல என நிரூபித்து வந்த ஆய்வுகள் அனைத்தும் தவறானது என இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட இரு பகுதிகளும் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.லண்டன் நகரத்தை பொறுத்தமட்டில் கடைசியாக 1770 ஆம் ஆண்டில் தான் நிலநடுக்கம் தாக்கியுள்ளது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*