;
Athirady Tamil News

பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று லாக்கரில் வைத்து பூட்டிய கொடூர தாயார்..!!

0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இளம் தாயார் ஒருவர் உணவு விடுதியின் கழிவறையில் குழந்தையை பிரசவித்து, அதை கொன்று லாக்கரில் வைத்து பூட்டிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டோக்கியோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றின் லாக்கரில் இருந்து கடந்த மாதம் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த உணவு விடுதி ஊழியர்கள் தொடர்புடைய லாக்கரின் பூட்டை உடைத்து சோதனை இட்டுள்ளனர்.

அந்த லாக்கரில் கண்ட காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. குறித்த லாக்கரில் அழுகிய நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

அதில் அந்த விடுதியில் உள்ள லாக்கர் அறையின் கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், 25 வயதான Mao Togawa என்ற இளம்பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மட்டுமின்றி அவர் மீது கொலை வழக்கு பதியப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் தமது நிலை குடும்பத்தில் பிரச்சனை எதையும் வரவழைக்க கூடாது என்ற நோக்கத்தில் உணவு விடுதி கழிவறையில் பிள்ளையை பெற்றெடுத்ததாகவும், ஆனால் குழந்தையை வெளியே எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால், வேறு வழியின்றி குழந்தையை கொன்று பெட்டிக்குள் அடைத்து லாக்கரில் பூட்டிவிட்டு சென்று விட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*