துப்பாக்கிச்சூட்டுக்கு மோடி வருத்தம் தெரிவிக்காதது ஏன்? – சுப்பிரமணிய சாமி விளக்கம்..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலோ அல்லது துப்பாக்கிச்சூடு குறித்து எந்த கருத்தும் பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு குறித்த முழு அறிக்கை வெளியாகாததாலே பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று மதுரை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று அவர் சென்னையில் பேசும் போது அரசியலில் இருந்து நடிகர்கள் விலகியே இருக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.