;
Athirady Tamil News

இயந்­தி­ரத்­துக்குள் அகப்பட்ட கை- யாழ் குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!!

0

தும்­புத் தொழிற்­சா­லை­யில் இயந்­தி­ரத்­துள் கை அகப்­பட்­ட­தால் மணிக்­கட்­டு­டன் கையை இழக்­கும் நிலை ஏற்­ப­ட­லா­மென்று மருத்­துவ அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மிரு­சு­வி­லில் இயங்­கும் தும்பு உற்­பத்தி நிலை­யத்­தில் பணி­பு­ரி­யும் கெற்­பே­லி­யைச் சேர்ந்த கம­ல­ராசா கம­ராம்­பிகை என்ற குடும்­பப் பெண்­ணுக்கு (வயது – 34) நேற்று இந்­த­நிலை ஏற்­பட்­டது.

இயந்­தி­ரத்­துள் பொச்சு மட்­டையை அமிழ்த்தி தும்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­ட­போது ஈர­மான பொச்­சு­மட்­டை­யு­டன் கை அதற்­குள் அகப்­பட்­ட­தால் கையை இயந்­தி­ரம் நசுக்­கி­யுள்­ளது.

கையில் காய­ம­டைந்த நிலை­யில் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார்.

இந்­தப் பெண் பொரு­ளா­தார நிலை­யில் பின்­தங்­கிய குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அவர் கையை இழந்­தால் குடும்­பத்­தில் மேலும் வறுமை நில­வும் அபா­யம் உள்­ள­தென்று பிர­தேச மக்­கள் தெரி­வித்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 4 =

*