;
Athirady Tamil News

பிரதி சபா­நா­ய­கர் தெரிவு: அங்­க­ஜ­னுக்கு ஐ.தே.கவும் ஆத­ரவு..!!

0

பிரதி சபா­நா­ய­க­ருக்கு ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அங்­க­ஜன் இரா­ம­நா­த­னின் பெயர் பிரே­ரிக்­கப் பட்­டுள்ள நிலை­யில் அவ­ருக்கு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் ஆத­ரவு வழங்­கும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பிரதி சபா­நா­ய­க­ரா­கப் பதவி வகித்த ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் உறுப்­பி­னர் திலங்க சும­தி­பால, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரித்­தி­ருந்­தார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­லி­ருந்து, தீர்­மா­னத்தை ஆத­ரித்த 16பேர் அர­சி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்­த­னர். அவர்­க­ளு­டன் திலங்க சும­தி­பா­ல­வும் வெளி­யே­றி­ய­மை­யால், பிரதி சபா­நா­ய­கர் பத­விக்கு வெற்­றி­டம் ஏற்­பட்­டி­ருந்­தது.

அந்த வெற்­றி­டத்­துக்கு ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அங்­க­ஜன் இரா­ம­நா­தனை நிய­மிக்க, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பரிந்­து­ரைத்­தி­ருந்­தார். இது தொடர்­பில் கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் ஆரா­யப்­பட்­டது.

பிரதி சபா­நா­ய­கர் பதவி அங்­க­ஜ­னுக்கு வழங்­கப்­ப­டு­வ­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸூம் ஏற்­க­னவே எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தன. அரச தலை­வ­ரின் முடிவை மீள் பரி­சீ­லனை செய்­யு­மாறு கோரப்­பட்­டி­ருந்­தது.

இருப்­பி­னும், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது நிலைப்­பாட்டை மாற்­றிக் கொள்­ள­வில்லை. இதே­வேளை, கூட்டு அர­சுக்­கான ஒப்­பந்­தத்­தில் பிரதி சபா­நா­ய­கர் பதவி ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­மை­யி­னால், ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி பரிந்­து­ரையை ஆத­ரிப்­பது என்று ஐக்­கிய தேசி­யக் கட்சி தீர்­மா­னித்­துள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 15 =

*