;
Athirady Tamil News

தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலை விசாரணைகளில் திடீர் திருப்பம்..!!

0

பிரபல கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையான ரஞ்சன் டி சில்வாவின் கொலை தொடர்பான விசாரணைகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் உறுப்பினரான ரஞ்சன் டி சில்வா மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

இரத்மலானை, ஞானானந்த பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையிலேயே குறித்த விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + six =

*