மலையிலிருந்து சரியும் கற்பாறைகள்- போக்குவரத்துப் பாதிப்பு- சாரதிகளுக்கு எச்சரிக்கை..!!

தியகல நோட்டன் பிரதான வீதியில் தியகலையிலிருந்து சுமார் 1.05.கிலோ மீற்றர் தொலைவில் மண் மற்றும் கற்கள் சரிந்து வீதியில் விழுந்துள்ளதால், இந்த வீதியின் ஊடான போக்குவரத்து சுமார் 5 மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தன.
நோட்டன் பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து மிகவும் சிரமப்பட்டு வீதியில் வீழ்ந்து கிடந்த கற்களை அகற்றியதன் காரணமாக, பொது போக்குவரத்து சுசிறிய ரக வாகனங்களுக்கு மாத்திரம் வழமைக்கு திரும்பின.
கற்களை அகற்றுவதற்கு வீதி போக்குவரத்து அதிகார சபைக்கு அறிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே கற்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. ஹற்றன் கொழும்பு மற்றும் தியகல நோட்டன் வீதியில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயம் ஏற்பட்டுள்ளன. இதனால் சாரதிகளுக்கும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.