;
Athirady Tamil News

பிரபாகரனின் பெருந்தன்மை எந்த தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இல்லை: ஆனந்தசங்கரி..!!

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இருந்த பெருந்தன்மை எந்தவொரு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இன்றைக்கு கிடையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினமும் நினைவுப் பேருரையும் சாவகச்சேரியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எந்தச் சம்பவம் என்றாலும் அதனை ஆராய்ந்தே முடிவுகளை எடுக்கின்ற பண்பு அவரிடம் இருந்தது. அவ்வாறு அவருக்கு இருக்கின்ற பண்புகளோ பெருந்தன்மைகளோ இன்றிருக்க கூடிய எந்தவொரு அரசியல் தலைமைகளுக்கும் கிடையாது.

எமது இளைய தலைமுறையினர் வரலாறுகளையும் உண்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காக செயற்பட முன்வந்தவர்கள் பணம் சேர்ப்பதும் பட்டம் பதவிகளைப் பெறுவதையுமே நோக்கமாகக் கொண்டிருக்காது மக்களுக்காக நீதியாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும்.

இதேவேளை தமிழ்க் கட்சிகள் பலவும் இன்றைக்கு தேசியம் பேசுகின்றன. அதில் தேசியம் பேசுகின்ற அல்லது அந்தக் கொள்கையுடன் பயணிக்கின்ற கட்சிகள் எவை என்பதையும் பார்க்க வேண்டும். இன்றைக்கு கூட்டமைப்பில் இருக்கின்ற ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் அரசுடன் இருந்த அரச கட்சிகளாகவே பார்க்கப்பட்டன.

அவர்களுடன் இன்று பலரும் தேசியம் பேசுகின்றவர்களாக இருக்கின்றனர்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 16 =

*