;
Athirady Tamil News

ஆற்றில் குளிக்க சென்ற நபரை காணவில்லை..!!

0

உடபுஸ்ஸல்லாவ, மடுல்ல பகுதியில் ஆற்றில் குளிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

ஆற்றில் குளிக்க சென்ற இருவரில் ஒருவர் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து ​குறித்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*