;
Athirady Tamil News

யாழ். இந்து கல்லூரி சிவஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சங்காபிஷேகம்..!! (படங்கள்)

0

யாழ். இந்துக் கல்லூரியில் வீற்றிருக்கும் சிவஞான வைரவப் பெருமானின் மகா கும்பாபிஷேக தின சங்காபிஷேகம்(1008) நேற்று (02.06.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சிறப்பு மேள கச்சேரியும் இடம் பெற்றது. இதனை தொடர்ந்து எம்பெருமான் வீதியுலா காங்கேசன்துறை வீதியூடாக அரசடி வீதிக்கு வந்து பின் கஸ்தூரியார் வீதி வழியாக கல்லூரிக்கு வந்தடைந்தது. வீதியுலாவின் போது மாணவர்கள் பஜனைகள் பாடிய வண்ணம் எம்பெருமான் பின்னாலேயே வந்தனர். தாகசாந்தி நிலையங்களை அமைத்து மாணவர்களுக்கும் வீதியால் சென்றவர்களுக்கும் குளிர்பானங்களை வழங்கினார்கள்.

இறுதி நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் வீதியுலா வந்ததனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 6 =

*